வெலிக்கடைச் சிறையில் யோசிதவைச் சந்தித்தார் மகிந்த
நிதி மோசடிக் குற்றச்சாட்டில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தனது மகன் யோசித ராஜபக்சவின், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பார்வையிட்டார்.
நிதி மோசடிக் குற்றச்சாட்டில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தனது மகன் யோசித ராஜபக்சவின், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பார்வையிட்டார்.
மீண்டும் சிங்கக்கொடிகளை ஏந்தி சிங்கள பெளத்த நாட்டைக் காப்பாற்ற அனைத்து சிங்களவர்களும் முன்வரவேண்டும், இந்த நாட்டை சிங்கள நாடாகவே கட்டியெழுப்ப வேண்டும் என்று, கொழும்பில் நேற்று நடத்திய கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியினர் சூளுரைத்துள்ளனர்.
சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினரான, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். சிறிலங்கா வரலாற்றில், அதிபராக இருந்த ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டது இதுவே முதல்முறையாகும்.
தேசிய அரசாங்கத்தில் தாமும் இணைந்து கொள்ளப் போவதாகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுக்கும் முடிவுகளுக்கு தாம் கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச.
ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவுக்கு, எதிர்வருமு ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாய்ப்பளிக்க மறுத்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச குடும்பத்தின் இன்னொரு வாரிசு களமிறங்கவுள்ளது. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மகனும், ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சருமான சசீந்திர ராஜபக்ச, இந்த முறை நாடாளுமன்றத் தேரதலில் முதல் தடவையாக போட்டியிடவுள்ளார்.
மகிந்த ராஜபக்ச பிரதமரானதும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் கல் எறிந்து கொல்லப்படுவர் என்று எச்சரித்த, தென்மாகாண அமைச்சர் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
தனது தந்தையோ அல்லது குடும்பத்தினரோ, வெளிநாடுகளில் 8 பில்லியன் டொலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதை, நிரூபித்தால் தாம் அரசியலை விட்டே விலகுவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்குச் சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.
2021ம் ஆண்டு நடைபெறும் சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில், ராஜபக்ச குடும்பத்தின் வாரிசான நாமல் ராஜபக்ச போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளார். 19வது திருத்தச்சட்டத்தின் மூலம், சிறிலங்கா அதிபர் தேர்தலில், போட்டியிடும் வேட்பாளரின் ஆகக்குறைந்த வயதெல்லை, 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு வளையத்தை, நாமல் ராஜபக்சவின் மெய்க்காவலர் துப்பாக்கியுடன் ஊடறுத்து நுழைந்த விவகாரம் குறித்து, நாமல் ராஜபக்சவிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.