மேலும்

Tag Archives: ஜே.ஆர்.ஜெயவர்த்தன

ராஜிவ் காந்தியை பொறியில் சிக்க வைத்த ஜே.ஆர் – நடந்ததை விபரிக்கிறார் நட்வர் சிங்

சிறிலங்கா அதிபராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வற்புறுத்தலான கோரிக்கையை அடுத்தே, இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி, 1987 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள், இந்தியப் படையினரை சிறிலங்காவுக்கு அனுப்பினார் என்று, அப்போது இந்தியாவின் முன்னாள் அமைச்சர் கே.நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் குடியியல் உரிமைகளை முடிந்தால் பறிக்கட்டும் –சவால் விடுகிறார் பீரிஸ்

மகிந்த ராஜபக்சவின் குடியியல் உரிமைகளை, சிறிலங்கா அரசாங்கம் முடிந்தால் ரத்துச் செய்து பார்க்கட்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின்  தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சவால் விடுத்துள்ளார்.

ஜே.ஆரின் பேரன் அரசியலில் குதிக்கிறார்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பேரன், பிரதீப் ஜெயவர்த்தன அரசியலில் குதிக்கவுள்ளார் என்று கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய அரசியலமைப்பு குறித்த மக்களின் ஆணை நிறைவேற்றப்படும் – ராஜித சேனாரத்ன

புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்பு திருத்தமோ நாட்டுக்குத் தேவையில்லை என்று பௌத்த பீடங்களும் சங்க சபாக்களும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும், அரசியலமைப்பு மாற்றத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை நிறைவேற்றப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கிய ஜே.ஆரின் மகன் ரவி ஜெயவர்த்தன காலமானார்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகனும், சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கியவருமான ரவி ஜெயவர்த்தன இன்று பிற்பகல் கொழும்பில் காலமானார்.

புதிய அரசியலமைப்பு குறித்த கருத்து வாக்கெடுப்புக்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு

புதிய அரசியலமைப்பு குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாடு ஒன்றில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜே.ஆரின் வழியில் புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக சிறிலங்காவால் புதிய சட்டம் ஒன்று வரையப்பட்டுள்ள போதிலும், இந்தச் சட்ட நகலானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விட மிகவும் மோசமானதாக இருக்கலாம் என மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சட்டவாளர்களும் அச்சமடைகின்றனர்.

ஜே.ஆர்.தொடக்கம் மகிந்த வரை – அச்சிடத் தயார் நிலையில் மகாவம்ச நூலின் புதிய பதிப்பு

மகாவம்ச நூலின் மேலதிக இணைப்பாக, ஜே.ஆர். ஜெயவர்த்தன காலம் தொடக்கம் மகிந்த ராஜபக்சவின் காலம் வரையான புதிய பகுதிகள் அச்சிடப்படவுள்ளன.

எதற்காக மகிந்த இன்னமும் அரசியலில் இருக்கிறார்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்து விட்டு பிரதமராகப் பதவி வகிக்கலாம் என மகிந்த விரும்பினால் அவருக்கு மைத்திரியின் ஆதரவும் தேவைப்படும். ஆனால் மைத்திரி ஒருபோதும் மகிந்தவுக்குப் பிரதமர் பதவியை வழங்க முன்வரமாட்டார்.