அஞ்சல் வாக்கு முடிவு – யாழ், மட்டு, அம்பாறை மைத்திரி வசம்
சிறிலங்கா அதிபர் தேர்தலில், அஞ்சல் மூலம் பதிவாகியுள்ள வாக்குகளின் முடிவுகளின் விபரம் – யாழ், பொலன்னறுவ, மட்டக்களப்பு மாவட்டங்களில் மைத்திரிபால சிறிசேன பெரும் வெற்றியை பெற்றுள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில், அஞ்சல் மூலம் பதிவாகியுள்ள வாக்குகளின் முடிவுகளின் விபரம் – யாழ், பொலன்னறுவ, மட்டக்களப்பு மாவட்டங்களில் மைத்திரிபால சிறிசேன பெரும் வெற்றியை பெற்றுள்ளார்.
சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளிநாடுகள் முயற்சிப்பதாகவும், அதற்குத் தான் ஒருபோதும், இடமளிக்க மாட்டேன் என்றும் சூளுரைத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
சிறிலங்கா அதிபரை பகிரங்கமான நேரடி விவாதத்துக்கு வருமாறு எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன விடுத்த சவாலை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
தேர்தல் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, சிறிலங்கா தேர்தல்கள் செயலகத்தின் முன்பாக இன்று எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
ஈராக்கிலோ, லிபியாவிலோ, எகிப்திலோ நிகழ்ந்தது போன்று சிறிலங்காவில் இடம்பெறுவதற்கு அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக, அதிபர் செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யானது என்றும், தாம் இதுபற்றி இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அந்தக் கட்சியின் பொதுச்செயலர் வை.எல்.எஸ்.ஹமீத் தெரிவித்தார்.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனது சொத்துகள் பற்றிய விபரங்களை எவரேனும் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரை நிறுத்தாது என்று கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, இந்த தேர்தல் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு இம்மாதம் மூன்றாவது வாரத்தில் தான் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கோப்புகள் குறித்து தான் கூறியதை ஊடகங்கள் தான் தவறாகப் புரிந்து கொண்டு விட்டதாக குத்துக்கரணம் அடித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
வரும் ஜனவரி 8ம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்குப் பின்னரும் தானே சிறிலங்கா அதிபராகத் தொடர்ந்து நீடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் மகிந்த ராஜபக்ச.