19வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்றத் தேர்தல்- சிறிலங்கா அதிபர்
19வது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தன்னை மீண்டும் இராணுவ சேவைக்குள் ஈர்க்க வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கையால், பீல்ட் மார்ஷலாக அவருக்குப் பதவிஉயர்வு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை, பீல்ட் மார்ஷல் பதவிநிலைக்கு உயர்த்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் தனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக, ஊடகங்களில் வெளியான செய்திகளை சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன மறுத்துள்ளார்.
சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யவோ, இன்னொரு நாட்டுக்கு எதிராக சிறிலங்காவைப் பயன்படுத்தவோமாட்டது என்று சீனா உறுதியளித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் சிறிலங்காவின் முப்படைகளுக்கும் காவல்துறையின் அதிகாரங்களைப் பயன்படுத்த அதிகாரமளிக்கும் அசாதாரணமான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவின் பிரதம நீதியரசராக மீண்டும் பொறுப்பேற்பதற்காக – முன்னைய அரசாங்கத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 43வது பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க உயர்நீதிமன்ற வளாகத்துக்கு தற்போது வருகை தந்துள்ளார்.
சிறிலங்காவின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபரான மைத்திரிபால சிறிசேன, இன்று தனது கடமைகளை முறைப்படி ஏற்றுக் கொண்டார்.
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண பதவியில் இருந்து விலக மறுத்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை புதிய அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளார்.