மேலும்

Tag Archives: கூட்டு எதிரணி

சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்து ஒத்திகை பார்த்த மகிந்த

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று அமர்ந்து கொண்டார். அதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

ரணிலைக் கவிழ்க்க மைத்திரியிடம் உதவி கோருகிறது மகிந்த அணி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.

மகிந்த அணிக்கு செக் வைக்கும் ஜேவிபி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில், ஜேவிபி கையெழுத்திடாது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அணியுடன் கைகோர்ப்பு?

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரும், ஆதரவாக கையெழுத்திடவுள்ளார். 

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – நாளை முடிவு செய்கிறது கூட்டு எதிரணி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து முடிவு செய்வதற்காக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நாளை கூடவுள்ளது.

ஐதேக முக்கிய உறுப்பினர்கள் பலர் ரணிலுக்கு எதிரான பிரேரணையில் கையெழுத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கையெழுத்திட்டுள்ளனர் என்று கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபரின் அவசர கூட்டத்தை சம்பந்தன் புறக்கணிப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூட்டிய அவசர கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பங்கேற்கவில்லை.

சிறிலங்கா அதிபரின் அவசர கூட்டத்தை மகிந்த அணி புறக்கணிப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று கூட்டவுள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கான அவசர கூட்டத்தைப் புறக்கணிக்க, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் கோத்தா – தினேஸ் குணவர்த்தன

2020ஆம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தகுதியானவர் அல்ல என்று கூட்டு எதிரணியின்  தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிவசக்தி ஆனந்தனின் குற்றச்சாட்டை விசாரிக்காவிடின் வழக்குத் தொடர்வோம் – மகிந்த அணி சூளுரை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா பிரதமரின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தலா 2 கோடி ரூபா இலஞ்சம் வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி அனந்தன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.