மேலும்

Tag Archives: குற்றவாளி

தூக்கிலிடுபவர் பதவிக்கு விண்ணப்பம் கோரியுள்ளது சிறிலங்கா அரசு

சிறிலங்கா சிறைச்சாலைகள் திணைக்களம், தூக்கிலிடுபவர் பதவிகளுக்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இந்தப் பதவிக்கு இரண்டு வெற்றிடங்கள் இருப்பதாகவும், குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றும் தற்துணிவு கொண்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை ஒப்படைக்கும் விவகாரத்தை தன் கைக்குள் எடுத்தார் மைத்திரி

குற்றவாளிகளை ஒப்படைத்தல் மற்றும், சிறிலங்கா குடியுரிமை தொடர்பான விவகாரங்கள் அனைத்தும், உள்நாட்டு விவகார அமைச்சிடம் இருந்து நீக்கப்பட்டு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வசமுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

எந்தவொரு படையினரையும் தண்டிக்கமாட்டோம் – சந்திரிகா

தமது உறவுகள் காணாமல்போக காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்குமாறு அவர்களின் உறவினர்கள் கோரவில்லை, எவ்வாறு காணாமல் போனார்கள் என்ற கேள்விக்கான பதிலையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கில் 4 சிறிலங்கா படையினருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை

விசுவமடுவில் பெண் ஒருவரை வல்லுறவுக்குட்படுத்திய, வயோதிப் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான நான்கு சிறிலங்கா படையினருக்கும் தலா 25 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆயுள்தண்டனைக் குற்றவாளிகளை மாநில அரசு விடுவிக்க உச்ச நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு

கொலை, வல்லுறவு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.