மேலும்

Tag Archives: காணாமல்போனோர்

கோத்தாவுக்கு ‘கட்டை’ போடுகிறதாம் அமெரிக்கா – திவயின கூறுகிறது

அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச களமிறங்குவதை தடுப்பதற்கான, நடவடிக்கை ஒன்றில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஈடுபட்டுள்ளதாக, திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது – ஐ.நா நிபுணர்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் பொறிமுறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது  என்று  உண்மை, நீதி, இழப்பீடு மற்றும்  மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்  பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொறுப்புக்கூறல் வாக்குறுதியை நிறைவேற்றுவது சந்தேகமே – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை உருவாக்கும் விடயத்தில் மெதுவான முன்னேற்றங்களே இடம்பெறுவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்.

இரகசிய தடுப்பு முகாம்களில் யாரும் இல்லை – கைவிரித்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் தற்போது எந்த இரகசியத் தடுப்பு முகாமும் இல்லை, அவ்வாறான இடங்களில் எவரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கவும் இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்து – அமெரிக்கா, கனடா, ஐ.நா வரவேற்பு

காணாமல்போனோர் பணியக சட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டிருப்பதற்கு அமெரிக்கா, கனடா மற்றும் ஐ.நா என்பன வரவேற்புத் தெரிவித்துள்ளன.

காணாமல்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்திட்டார் சிறிலங்கா அதிபர்

காணாமல்போனோர் பணியக சட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று கையெழுத்திட்டுள்ளார். இது தொடர்பாக அவர். கீச்சகத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில், காணாமல் போனோர் பணியக சட்டத்தில் இன்று கையெழுத்திட்டேன். இது நிலையான அமைதிக்கான பாதையில் சிறிலங்காவின் முன்னேற்றத்துக்கான மற்றொரு படியைக் குறிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

காணாமல்போனோர் பணியக திருத்தச்சட்டம் ஒரு மனதாக நிறைவேறியது

காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்குதல், நிர்வகித்தல் மற்றும் செயற்பாடுகளை நீக்குதல் தொடர்பான திருத்தச்சட்டம் நேற்று சி்றிலங்கா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

காணாமல்போனோர் பணியகத்தின் அதிகாரத்தைக் குறைக்க திருத்தச்சட்டம்

காணாமல்போனோர் பணியகச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஐந்து மாதங்களிலேயே அதன் அதிகாரத்தைக் குறைக்கும் திருத்தச்சட்டம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவுள்ளது.