சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் பரிந்துரை
சிறிலங்காவுக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக கலிபோர்னியாவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த அமெரிக்க இராஜதந்திரி எரிக் மேயர் (Eric Meyer) பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்காவுக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக கலிபோர்னியாவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த அமெரிக்க இராஜதந்திரி எரிக் மேயர் (Eric Meyer) பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அனைத்துலக சட்டங்களின்படி, சிறிலங்கா படைகளால் நிகழ்த்தப்பட்ட மீறல்களுக்கு கட்டளை வழங்கியவர் என்ற வகையில், கோத்தாபய ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டியவர் என்று அனைத்துலக சட்ட நிபுணர் ஸ்கொட் கில்மோர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளும் அடிப்படையற்றவை என்று நிராகரித்துள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இந்த வழங்குகள் தமக்கும் தமது ஆதரவாளர்களுக்கும் சிறிலங்காவில் அரசியல் மாற்றத்துக்கான ஊக்கத்தை அளித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று காலை எமிரேட்ஸ் விமானத்தில் சிறிலங்காவுக்குத் திரும்பவுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நாளை நாடு திரும்புவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பான அறிவித்தல் ஆவணங்கள் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டமைக்கான ஒளிப்பட ஆதாரம் வெளிவந்துள்ளது.
கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் பகிரங்க பதிவேட்டில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அகிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்துள்ள வழக்குத் தொடர்பான எந்த ஆதாரங்களும் இல்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பான எந்த அறிவித்தல்களும் அவருக்கு வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக அவருக்கு நேற்றிரவு எழுத்துமூல அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.