மேலும்

Tag Archives: கபில வைத்தியரத்ன

லங்கா இ நியூஸ் ஆசிரியரை திருப்பி அனுப்புமாறு பிரித்தானியாவிடம் கோரிய சிறிலங்கா அதிபர்

லண்டனைத் தளமாக கொண்டு இயங்கும், லங்கா இ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் பிரதீப் சந்துருவன் சேனாதீரவை, கைது செய்யுமாறு அல்லது சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புமாறு பிரித்தானியாவிடம் கோரியுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

போர்த் தளபாடக் கொள்வனவு – ரஷ்யாவுடன் பேச்சு நடத்தி விட்டு திரும்பியது சிறிலங்கா குழு

ரஷ்யாவிடம் இருந்து இராணுவ தளபாடங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக பேச்சுக்களை நடத்தி விட்டுத் திரும்பியுள்ளது சிறிலங்க அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு.

தமிழர்கள் மீதான சித்திரவதை – குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

தமிழ்ப் போராளி சந்தேகநபர்கள் மீது சித்திரவதைகள் மற்றும் பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, இது ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோருவதற்காக கூறப்பட்ட குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற நீதிமன்றில் படையினரை நிறுத்த அனுமதியேன் –சிறிலங்கா அதிபர் உறுதி

சிறிலங்கா அதிபராக தான் இருக்கும் வரை, சிறிலங்கா படையினரை எந்தவொரு போர்க்குற்ற நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன் என்று மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

ஜப்பானிய போர்க் கப்பலில் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் ஜப்பானிய கடற்படையின் போர்க்கப்பல்களை, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன மற்றும் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன் அமெரிக்க துணைத் தூதுவர் சந்திப்பு

சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக பொறுப்பேற்றுள்ள கபில வைத்தியரத்னவை, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியும், துணைத் தூதுவருமான ரொபேர்ட் ஹில்டன் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

போர்க்குற்ற வழக்குகளில் அனுபவமுள்ள கபில வைத்தியரத்ன பாதுகாப்புச் செயலராக நியமனம்

மூத்த மேலதிக சொலிசிற்றர் ஜெனரலும், அதிபர் சட்டவாளருமான, கபில வைத்தியரத்ன, சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன?

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலராக மூத்த மேலதிக அரச சட்ட ஆலோசகர் கபில வைத்தியரத்ன நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.