அம்பாந்தோட்டைக்கு வந்த சீன குழுவினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – கடற்படை பலத்த பாதுகாப்பு
அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சீன குழுவொன்று நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சீன குழுவொன்று நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளது.
இந்தியத் தூதரக உதவிப் பாதுகாப்பு ஆலோசகராக, லெப்.கேணல் ரவி மிஸ்ரா அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
சிறிலங்கா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகளை அமெரிக்கா முன்னெடுத்துள்ளதாக, அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய கடற்படையின் ‘அமகிரி’ என்ற நாசகாரி போர்க்கப்பல் நேற்று சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மூன்று நாட்கள் நல்லெண்ணப் பயணமாக வந்துள்ள இந்தக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
2008ஆம் ஆண்டு கொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க, வெலிசறையில் உள்ள சிறிலங்கா கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெலிசறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் லெப்.கொமாண்டர் தரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரைக் கைது செய்யுமாறு கோட்டே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை ஒழுங்கு செய்யவுள்ளதாக பிரெஞ்சுக் கடற்படையின் மிஸ்ரால் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் ஸ்ரனிஸ்லஸ் டி சார்கெரஸ் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் ஒரு சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனர்த்தத்துக்குப் பிந்திய உதவிப் பணிகளை மேற்கொள்வதற்காக சிறிலங்காவுக்கு வந்திருந்த அமெரிக்க போர்க்கப்பல், ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.