11 தமிழர்கள் கடத்தல் – சிறிலங்கா கடற்படை அதிகாரியைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் லெப்.கொமாண்டர் தரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரைக் கைது செய்யுமாறு கோட்டே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





