மேலும்

Tag Archives: ஒற்றையாட்சி

ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தலாம் – மகாநாயக்கர்களிடம் கோரிக்கை

ஒற்றையாட்சிக்கு விரோதமான கொள்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பின்பற்றுவதைத் தடுக்க, மகாநாயக்கர்களை  தலையீடு செய்யுமாறு, போர்வீரர்கள் மற்றும் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்கான அமைப்புகளின் கூட்டமைப்பு, கோரியுள்ளது.

ஒற்றையாட்சியை ஏற்கவில்லை கூட்டமைப்பு – உதய கம்மன்பில

ஒற்றையாட்சி அரசு கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சித் தன்மையில் மாற்றம் இருக்காது – சிறிலங்கா பிரதமர் உறுதி

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது ஒரு நீண்ட பயணமாக இருக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அர்த்தம் தெரியாதவர்களே எதிர்க்கின்றனர்- ராஜித சேனாரத்ன

அதிகாரப்பகிர்வின் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்கள் தான், புதிய அரசியலமைப்புக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சி, பௌத்தத்துக்கு முன்னுரிமை – ஐக்கிய தேசிய முன்னணி முடிவு

புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடுவதெனவும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்களில் எந்த மாற்றங்களைச் செய்வதில்லை என்றும், ஐக்கிய தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது.

ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டதாக கூறப்படுவது பொய் – சுமந்திரன்

ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சி அல்ல, நாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கி விட்டதாக கூறப்படுவது பொய் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மீதான தாக்குதல்

செப்ரெம்பர் 21 அன்று வெளியிடப்பட்ட சிறிலங்காவின் பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்பு மீதான இடைக்கால அறிக்கை தொடர்பாக பல்வேறு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த முயற்சிப்பவர்கள் தேசத்துரோகிகள் எனவும் இவர்கள் கொல்லப்பட வேண்டும் எனவும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசியலமைப்பில் ‘ஒற்றையாட்சி’க்குப் பதில் ‘ஐக்கிய’ இடம்பெற வேண்டும் – விக்னேஸ்வரன்

புதிய அரசியலமைப்பில், சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி அரசு ‘Unitary (Ekiya)’  என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, சிறிலங்கா ஒரு ‘ஐக்கிய’ நாடு ‘United (Eksath)’  என்றே அழைக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் – கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன

புதிய அரசியலமைப்பு சமஷ்டிக்கான எந்த அடையாளத்தையும் கொண்டிருக்காது என்றும், ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு விவகார நிபுணருமான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன.

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை நீர்த்துப்போகச் செய்யாது – சிறிலங்கா பிரதமர்

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி தன்மையை எந்த வழியிலும் நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அமைந்திருக்காது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.