உச்சநீதிமன்றத்தை நாடும் ஐதேக – அலரி மாளிகையில் குவிந்த ஆதரவாளர்கள்
சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க, அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உச்சநீதிமன்றத்தை நாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க, அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உச்சநீதிமன்றத்தை நாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா அரசியலில் முதல் முறையாக – இரண்டு வாரங்களில் 11ஆவது தடவையாக இன்று மாலையும் ஐந்து அமைச்சர்கள் பதவியேற்பு இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்கு, நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆசனத்தை வழங்க முடியாது என்றும், தற்போதைய ஆளும்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர முடியும் என்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று, அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் பிரதமராக, மகிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்றுக் கொள்ளவில்லை என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
அனைத்துலக குற்றவாளியாவதில் இருந்து சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காப்பாற்றினார், என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அடுத்த மாதம் முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவை அடுத்து, இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து, விஜயகலா மகேஸ்வரன் விலகியுள்ளார்.
புதிதாக நியமிக்கப்படும் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியிடம் கூறியுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.