மேலும்

Tag Archives: ஊழல்கள்

இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம்

மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும், முன்னைய ஆட்சிக்கால ஊழல்கள், மோசடிகள் என்பன குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

மகிந்தவின் குடியுரிமையை பறிக்க கருத்து வாக்கெடுப்பும் அவசியம் – சரத் என் சில்வா

மகிந்த ராஜபக்சவின் குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மட்டும் போதாது, கருத்து வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் குடியுரிமையைப் பாதுகாக்க முயற்சி – மைத்திரியைச் சாடிய ரணில்

மகிந்த ராஜபக்சவை குடியுரிமை இழப்பில் இருந்து காப்பாற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் முயற்சிப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்த, கோத்தாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஆணைக்குழு பரிந்துரை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, பாரிய நிதி மோசடிகள், ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

மகிந்த ஆட்சிக்கால ஊழல்கள் குறித்து விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று கையளிப்பு

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள், மோசடிகள் போன்ற மோசமான செயல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

அதிபர் ஆணைக்குழுவுக்கு முடிவு கட்டுகிறார் மைத்திரி

ஊழல்கள், மோசடிகள், மற்றும் அதிகாரம், அரசாங்க வளங்கள் முன்னுரிமைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட மோசமான செயற்பாடுகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்படாததால் அதன் செயற்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளன.

மகிந்தவின் ஆலோசகராக 10 ஆண்டுகள் பணியாற்றிய வாசுதேவவின் மனைவி

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தனது மனைவி, அதிபர் செயலகத்தில் ஆலோசகராகப் பத்து ஆண்டுகள் பணியாற்றினார் என்பதை, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஒப்புக் கொண்டுள்ளார்.