மைத்திரி, ரணிலுடன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தனித்தனியே பேச்சு
சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர், நேற்று இருதரப்புகளுடனும் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர், நேற்று இருதரப்புகளுடனும் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைக்கு எதிராக நிச்சயமாக நாங்கள் உச்சநீதிமன்றத்துக்குச் செல்வோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க, அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உச்சநீதிமன்றத்தை நாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்குப் பின்னால், வெளிநாடு ஒன்று இருப்பதாக நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்ய பல நாடுகள் முயற்சிக்கின்றன என்றும், வெளிநாடுகளின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றத்தைக் கூட்டக் கூடாது என்றும் கூறியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சிறிலங்காவில் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச இன்று அதிகாரபூர்வமாக பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மற்றொரு கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்வரும் நொவம்பர் 05ஆம் நாள் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு உடன்பாட்டின் முக்கியத்துவத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.