மேலும்

Tag Archives: திருகோணமலை

பதவி விலகினார் திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை

கத்தோலிக்கத் திருச்சபையின் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண. ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தனது பதவியை விட்டு விலகியுள்ளார். அவரது பதவி விலகலை பாப்பரசர் பிரான்சிஸ், ஏற்றுக்கொண்டுள்ளதாக, வத்திக்கான் வானொலி தகவல் வெளியிட்டுள்ளது.

யாழ், திருமலை மீனவர்கள் ஐவர் இந்திய கடலோரக் காவல்படையால் கைது

இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவியதாக கைது செய்யப்பட்டுள்ள ஐந்து யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மீனவர்கள் இந்தியக் கடலோரக் காவல் படையினரால், காரைக்கால் கடலோரக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்தியப் பணியகம் – நாளை திறப்பு

சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்திய பணியகம் ஒன்று, கிளிநொச்சியில் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. கிளிநொச்சியில் உள்ள அறிவியல் நகரில், இந்த பிராந்தியப் பணியகம் நாளை முதல் செயற்படவுள்ளது.

இந்தியப் போர்க்கப்பல்கள் திருக்கோணமலைக்கு வருகின்றன

மூன்று நாள் பயணமாக இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படையணியைச் சேர்ந்த நான்கு கப்பல்கள் திருக்கோணமலைத் துறைமுகத்துக்கு இன்று வருகை தரவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் உதவியுடன் கிழக்கில் அமைக்கப்பட்ட முதல் தொகுதி வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட முதல்தொகுதி வீடுகள், இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின், கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கதிரவெளி கிராமத்தில் நடைபெற்றது.

திருமலையை இந்தியாவுக்கு வழங்கியதால் பயங்கர விளைவுகள் ஏற்படும் – எச்சரிக்கிறார் திஸ்ஸ விதாரண

திருகோணமலையை இந்தியாவுக்கு வழங்கியமை எதிர்காலத்தில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்த வழிவகுக்கும் என்று முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாசக் கட்சித் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண எச்சரித்துள்ளார்.

திருகோணமலைத் துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல்

பாகிஸ்தான் போர்க்கப்பல் ஒன்று மூன்று நாள் நல்லெண்ணப் பயணமாக திருகோணமலைத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.

இராணுவ ஆட்சியில் இருந்து விடுபட்டது திருகோணமலை – சிவில் அரச அதிபர் நியமனம்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரான சிவில் அதிகாரியான என்.ஏ.ஏ.புஸ்பகுமார நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து எட்டு ஆண்டுகால இராணுவ ஆட்சியில் இருந்து திருகோணமலை மாவட்டம் விடுபட்டு, நேற்று முதல் சிவில் நிர்வாகம் மீளவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கவிழும் நிலையில் கிழக்கு மாகாணசபை – ஆறு உறுப்பினர்கள் ஆதரவை விலக்கினர்

கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கிய ஆதரவை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆறு உறுப்பினர்கள், இன்று விலக்கிக் கொண்டுள்ளனர்.

தமிழ் இளைஞர்கள் கடத்தல் குறித்து சிறிலங்கா கடற்படை முன்னாள் பேச்சாளரிடம் விசாரணை

கொழும்பிலும், திருகோணமலையிலும், தமிழ் இளைஞர்களும் அவர்களின் பெற்றோரும் கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவங்கள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தசநாயக்கவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.