மேலும்

Tag Archives: தமிழீழ விடுதலைப் புலிகள்

இராணுவமயமாக்கல்: சிறிலங்காவின் நிலையான அமைதிக்கு முக்கிய சவால்

2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போரின் மூலம் சிங்கள தேசம் பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை தொடர்ந்தும் நிலைத்திருக்கச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவப் பலத்தை முதலில் குறைக்க வேண்டும்.

தமிழ்மக்களின் உளவியலைப் பாதித்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களின் அழிப்பு

தமது நேசத்திற்குரியவர்கள் உயிர்நீத்த பின்னர் அவர்களை மீண்டும் மீண்டும் நினைவுகூருவதற்கான ஒரேயொரு இடமாகக் காணப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டமை தமிழ் மக்களின் உளவியலை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது. இராணுவத்தால் இவை நிர்மூலமாக்கப்பட்டமையால் தமிழ் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படக் காரணமான மூன்று காரணிகள் – ஒரு அனைத்துலக ஆய்வு

அனைத்துலகில் செயற்பட்ட கிளர்ச்சிக் குழுக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்துவம் வாய்ந்ததாகக் காணப்பட்டது. சிறிலங்கா அரசாங்கத்தின் கடல் வழி ஏற்றுமதி இறக்குமதிகள் மற்றும் கேந்திரம் முக்கியத்துவம் மிக்க கடல்வழிப் போக்குவரத்துப் போன்றவற்றை தடுத்து நின்ற போரியல் ஆற்றல் மிக்க ஒரு அமைப்பாக விளங்கியது.

காத்திரமான போர்க்குற்ற விசாரணை சிறிலங்காவின் பழைய காயங்களை குணப்படுத்தக் கூடும்

காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு ஒன்று செயற்படுகிறது. ஆனால் உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக எவ்வித நீதி சார் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

மீண்டும் விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை – இராஜதந்திர வெற்றி என்கிறது சிறிலங்கா

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் நீடித்துள்ளதாக, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீடித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்பதால் அதன் மீதான தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.