கூட்டமைப்புடன் ஒன்றரை மணிநேரம் பேச்சு நடத்தினார் நிஷா பிஸ்வால்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள 7 ஆசனங்களையும் கைப்பற்றும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
நாடாளுமன்றத் தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எடுத்துள்ள முடிவு அவரது தனிப்பட்ட நிலைப்பாடு என்றும், அதனை விமர்சிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன்.
வடக்கு, கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக, மனோ கணேசனுடன் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தியுள்ளது. கொழும்பில் நேற்று மாலை இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று நம்புவதாக, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியில் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்களின் முன்னோடிப் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை சிதைக்கும் நோக்கில், அதிகளவு கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேறும் குடும்பங்களுக்கு 2000 வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவியைப் பெறுவதற்கு, கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகளுக்கான கூட்டம் ஒன்று கூட்டப்படவுள்ளது.
சிறிலங்கா அரசாங்க, தமிழர் பிரதிநிதிகள், அனைத்துலக சமூகப் பிரதிநிதிகளுக்கு இடையில் பிரித்தானியாவில் நடைபெறும் பேச்சுக்களில், போர்க்குற்ற விசாரணை குறித்தோ, அரசியல்தீர்வு குறித்தோ விவாதிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்துகளின் மூலம், அவர் இனவாத நிகழ்ச்சி நிரலின் கீழ் தான் செயற்படுகிறார் என்பது உறுதியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.