மேலும்

Tag Archives: உச்சநீதிமன்றம்

அதிபர் பதவியில் இருந்து மைத்திரி விலக வேண்டும் – குமார வெல்கம

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

தீர்ப்பை தொகுக்கும் பணியில் நீதியரசர்கள் – இன்று அல்லது நாளை வெளியாகும்

சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்ட நாடாளுமன்றக் கலைப்பு அரசிதழுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அல்லது நாளை அறிவிக்கும் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நீதித்துறை மீது தலையிடும் மைத்திரி – உச்சநீதிமன்றில் மனு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நீதித்துறையை அவமதித்துள்ளதாகவும், நீதித்துறை சுதந்திரத்தின் மீது தலையீடு செய்துள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எம்.பிக்களுக்கு மகிந்த இலஞ்சம் கொடுக்க முனைந்தார் – மைத்திரி ஒப்புதல்

தான் நியமித்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டார் என்பதை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார்.

தீர்ப்பு வழங்கப்படும் வரை தடை நீடிப்பு

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு, நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க, பிரதி அமைச்சர்களுக்கு வேட்டு வைத்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அரசாங்கத்தில் தற்போது, இராஜாங்க அமைச்சர்களோ, பிரதி அமைச்சர்களோ பதவியில் இல்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய

நாடாளுமன்றத் தேர்தலுக்கான செயற்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தி வைத்திருப்பதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவின் 36 பிரிவுகளுக்கு பொதுவாக்கெடுப்பு – உச்சநீதிமன்றம்

ஜேவிபியினால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை சட்டமாக நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், பொதுவாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான விக்னேஸ்வரனின் மனு நிராகரிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக டெனீஸ்வரன் தரப்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரும் மனுவை, சிறிலங்கா உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

2020 ஜனவரி 08ஆம் நாளுடன் முடிகிறது மைத்திரியின் பதவிக்காலம் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2020 ஜனவரி 08ஆம் நாளுடன் முடிவுக்கு வரும் என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதாக, சிறிலங்கா அதிபர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.