அமெரிக்கர்கள் சிறிலங்காவை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் – உதய கம்மன்பில
அதிபர் தேர்தலின் முடிவுகளை ஏற்றுக் கொண்ட, சிறிலங்காவை அமெரிக்கா முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலின் முடிவுகளை ஏற்றுக் கொண்ட, சிறிலங்காவை அமெரிக்கா முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தொழில்சார் அரசியல்வாதிகளை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் ஈட்டிய வெற்றி எடுத்துக் காட்டுவதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடிச் சென்று, நௌரு மற்றும் மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 1800 அகதிகள், அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் பெரும்பான்மையின மக்கள், டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளதை, சிறிலங்காவின் பெரும்பான்மையின சிங்களவர்கள் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலின் முதல் கட்ட முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் முன்னிலை வகிப்பதாக பிந்திய முடிவுகள் கூறுகின்றன. (காலை 6.30 மணி நிலவரம்)
அமெரிக்காவின் 58 ஆவது அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் கடுமையான நேரடிப் போட்டி நிலவுகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான 14 புதிய உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்காக நேற்று ஐ.நா பொதுச்சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அமெரிக்கா, பிரித்தானியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வெற்றி பெற்றுள்ளன.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலின் சிறிலங்கா நோக்கிய அவசர பயணமானது எவ்வித நோக்கமுமற்றது எனக் கருத முடியாது. ஏனெனில் பிஸ்வாலின் இராஜாங்கத் திணைக்களம் மைத்திரி – ரணில் அரசாங்கம் தொடர்பாக அண்மைய சில மாதங்களாகப் பெற்றுக் கொண்ட அறிக்கைகள் பாராட்டத்தக்கவையாக இருக்கவில்லை.
சிறிலங்காவில் மனித உரிமையை பேணவும் நல்லிணக்க, பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை பலப்படுத்தவும் அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று அமெரிக்காவின் உதவித் திட்டங்களுக்கான ஆசியப் பிராந்திய உதவி நிர்வாகி ஜொனாதன் ஸ்டிவர்ஸ் தெரிவித்தார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு உயர் அதிகாரி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.