மேலும்

புலிகளின் வெடிபொருட்களை கண்டுபிடிக்கவே சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா பயிற்சி

விடுதலைப் புலிகளால் குளங்களிலும், கடலேரிகளிலும், விட்டுச் செல்லப்பட்டுள்ள வெடிபொருட்களை அகற்றுவதற்கே, அமெரிக்காவிடம் சி்றிலங்கா கடற்படையினர் பசுபிக் தீவில் பயிற்சி பெற்று வருவதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

அமைச்சர்கள் மாற்றம் குறித்து கவனமாக ஆராய்ந்த பின்னரே முடிவு – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாக மிகக் கவனமாக ஆராயப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடற்படையின் தென்பிராந்திய தளபதி இந்திய அமைதிப்படையினருக்கு அஞ்சலி

இந்தியக் கடற்படையின் தென்பிராந்தியக் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் கிரிஷ் லுத்ரா ஆறு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ளார். நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த, இந்தியக் கடற்படையின் சுஜாதா, திர் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையின் வருண ஆகிய கப்பல்களின் அணியுடனேயே இவர் சிறிலங்கா வந்துள்ளார்.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் – வாய்திறக்க சிறிலங்கா தயக்கம்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து வெளியிட சிறிலங்கா அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது.

கண்ட மேடைக்கு உரிமை கோரும் சிறிலங்காவுக்கு பங்களாதேஸ் எதிர்ப்பு

தனது கரையில் இருந்து 200 கடல் மைல் தொலைவுக்கு அப்பாலுள்ள கண்டமேடைக்கு உரிமை கோரும் சிறிலங்காவின் செயலுக்கு பங்களாதேஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ருமேனியாவில் பிடிபட்ட 5 சிறிலங்கா இளைஞர்கள் சேர்பியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்

சட்டவிரோதமாக ருமேனியாவுக்குள் நுழைந்த சிறிலங்காவைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள், சேர்பியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன் சம்பந்தன் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்று பிற்பகல் வடக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார்.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் – மறுப்பதற்கு அவசரப்படாத சிறிலங்கா இராணுவம்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சிறிலங்காவின் மனித உரிமைகள் பற்றிய அறிக்கையில், கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்துக்கு இந்தியப் போர்க்கப்பல்கள் வருகை

இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சி அணியைச் சேர்ந்த இரண்டு போர்க்கப்பல்களும், இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பல் ஒன்றும், ஆறு நாள் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகம் வந்துள்ளன.

சிறிலங்காவில் மதிப்புக்கூட்டு வரி 15 வீதமாக அதிகரிக்கிறது

சிறிலங்காவில் மதிப்புக்கூட்டு வரி (வற் வரி) அடுத்த மாதம் 02ஆம் நாள் தொடக்கம் 15 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. சிறிலங்கா நிதி அமைச்சு இன்று இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.