மேலும்

புதிய காவல்துறை மா அதிபர் பதவியேற்றதும் தாஜுதீன், பிரகீத் வழக்கு விசாரணைகள் தீவிரம்

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை மற்றும், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டமை தொடர்பான வழக்குகள், தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதி ஜூலையில் மீள ஆரம்பம்

சிறிலங்கா மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து. ஐரோப்பிய ஒன்றியத்துக்கான, மீன் ஏற்றுமதி வரும் ஜூலை மாதம் மீள ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒன்ராரியோ லிபரல் கட்சி வேட்பாளராக இடைத்தேர்தலில் களமிறங்குகிறார் ராதிகா

இலங்கையில் பிறந்த முன்னாள் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான, ராதிகா சிற்சபைஈசன், ஸ்காபரோ-ரூஜ் ரிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில், ஒன்ராரியோ லிபரல் கட்சியின் வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.

மகிந்தவின் பணியகம் அருகே நடமாடிய மர்ம நபர் கைது

அண்மையில் பத்தரமுல்லையில் திறந்து வைக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவின் பணியகம் அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் பிடிக்கப்பட்டு, சிறிலங்கா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா காவல்துறையின் பெயரை மாற்றினார் புதிய காவல்துறை மா அதிபர்

சிறிலங்கா காவல்துறை திணைக்களம் இனிமேல், சிறிலங்கா காவல்துறை (Sri Lanka police) என்று அழைக்கப்படும், என்று சிறிலங்கா காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர அறிவித்துள்ளார்.

மகிந்தவின் செயற்பாடுகளை அம்பலப்படுத்த நூல் எழுதுகிறார் மைத்திரி

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தொடர்பான தனது தனிப்பட்ட அனுபவங்கள் பற்றிய நூல் ஒன்றை எழுத ஆரம்பித்திருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசென தெரிவித்துள்ளார்.

கவலைகள் தொடர்ந்தாலும் சிறிலங்காவின் மனித உரிமைகளில் முன்னேற்றம் – பிரித்தானியா

கடந்த ஆண்டு சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சில மனித உரிமைகள் கவலைகள் தொடர்வதாக, பிரித்தானியா தெரிவித்துள்ளது.

தாஜுதீன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளருக்கு விளக்கமறியல்

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, நேற்று கைது செய்யப்பட்ட சிறிலங்கா காவல்துறை ஆய்வாளரை, மே 5ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யாவிடம் போர்க்கப்பலை வாங்குவதில் சிறிலங்கா ஆர்வம்

ரஸ்யாவிடம் இருந்து ஜிபாட் வகை போர்க்கப்பல்களை வாங்குவதில் சிறிலங்கா ஆர்வம் காட்டுவதாக ரஸ்ய ஊடகமான ஸ்புட்னிக்  செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்கா மீதான கடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதி தடையை நீக்குவதாக, ஐரோப்பிய ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட இந்த தடையை நீக்குவதற்கு, நீண்ட கலந்துரையாடல்களின் இறுதியில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.