மேலும்

மங்கள சமரவீரவை ஒதுக்கி விட்டுச் சென்றாரா மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள இரண்டு வெளிநாட்டுப் பயணங்களிலும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்காதது, அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறிலங்கா அரசை நிலை குலையவைத்த புலனாய்வு அறிக்கை – உபுல் ஜோசப் பெர்னான்டோ

அண்மையில் சிறிலங்கா அரசாங்கம் புலனாய்வுப் பிரிவிடமிருந்து அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொண்டது. சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சில மேஜர் ஜெனரல்களுடன் பசில் ராஜபக்ச பேச்சு நடத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்தை நிலைகுலையச் செய்தது.

மே 21இற்குப் பின்னர் அமைச்சரவை மாற்றம்

சிறிலங்கா அமைச்சரவை, வரும் மே 21ஆம் நாளுக்குப் பின்னர், மாற்றியமைக்கப்படவுள்ளதாக, நன்கு தகவல் அறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உஜ்ஜெயின் கும்பமேளா – ஒரே மேடையில் மைத்திரி, மோடி, சம்பந்தன்

இந்தியாவின் உஜ்ஜெயின் நகரில் நடைபெறும் கும்பமேளாவை முன்னிட்டு, நடத்தப்பட்ட அனைத்துலக மாநாட்டில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

சம்பூரில் திரவ எரிவாயு மின் திட்டம் – இந்தியாவுடன் வரும் 20ஆம் நாள் பேச்சு

சம்பூர் அனல் மின் திட்டத்தை, திரவ இயற்கை எரிவாயு மின் திட்டமாக மாற்றியமைப்பது தொடர்பாக, வரும் 20ஆம் நாள், இந்திய பங்காளர்களுடன், சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சின் குழுவொன்று பேச்சுக்களை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா எதிர்ப்பு – கச்சதீவில் தேவாலயம் கட்டும் பணிகளை நிறுத்தியது சிறிலங்கா அரசு

இந்திய அரசாங்கம் எழுப்பிய கரிசனைகளையடுத்து, கச்சதீவில் புதிய தேவாலயத்தை அமைக்கும் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.

குற்றச்செயல்கள் அதிகரிப்பை நியாயப்படுத்துகிறார் வடக்கு ஆளுனர் – முன்னரும் இப்படி நடந்ததாம்

வடக்கில் முன்னரும் குற்றச்செயல்கள் இடம்பெற்று வந்ததாகவும், ஆனால் போர்க்காலத்தில் ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும், தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே.

யாழ்ப்பாணத்தில் இம்முறை வெசாக் கொண்டாட்டங்களுக்கு பெரியளவில் ஏற்பாடு

இம்முறை யாழ்ப்பாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களை, பெரியளவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படைகளின் மே 18 போர் வெற்றி அணிவகுப்பு இந்த ஆண்டு இல்லை

போர் வெற்றி அணிவகுப்பு இந்த ஆண்டு நடத்தப்படாது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் சிறிலங்கா விமானப்படையின் கடல்-வான் மீட்பு ஒத்திகை

வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து சிறிலங்கா விமானப்படை, நேற்றுக்காலை கடல்-வான் மீட்பு ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளது.