மேலும்

சீனக்குடா குதங்களை வழங்க இந்தியா மறுப்பு – 4 புதிய எண்ணெய் தாங்கிகளை அமைக்கிறது சிறிலங்கா

சீனக்குடா எண்ணெய் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவனம் வழங்க மறுத்து வருவதால் சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம், 1 பில்லியன் ரூபா செலவில் நான்கு எண்ணெய் தாங்கிகளை அவசரமாக அமைக்கவுள்ளது.

ஏறு தழுவுதலுக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கு, கொழும்பில் பரவலாக போராட்டங்கள் – படங்கள்

தமிழ்நாட்டில் ஏறு தழுவுதல் விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று வடக்கு, கிழக்கு, மற்றும் கொழும்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

கொழும்பு நிதி நகரத்துக்கான 28 வீத நிலப்பரப்பு கடலில் இருந்து மீட்பு

கொழும்பு நிதி நகரத்தை அமைப்பதற்காக, கடலில் இருந்து 28 வீத நிலப்பரப்பு உருவாக்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சிய நிலப்பரப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் உருவாக்கப்பட்டு விடும் என்றும் சீன துறைமுக பொறியியல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

45 ஆவது அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக, டொனால்ட் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். வொசிங்டனில் நேற்று நடந்த இந்த விழாவில், அமெரிக்க தலைமை நீதிபதி ஜோன் ஜி.ரொபேர்ட்ஸ், அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியாவுடன் பேச்சு – ரணில்

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து இந்தியாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

லசந்த படுகொலை – சரத் பொன்சேகாவிடம் பல மணிநேரம் விசாரணை

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

உச்சக்கட்டத்தில் ஏறு தழுவுதல் ஆதரவுப் போராட்டம் – பணிகின்றன மத்திய, மாநில அரசுகள்

ஏறு தழுவுதல் விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக, தமிழ்நாட்டில் நடத்தப்படும் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஏறு தழுவுதல் விளையாட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை குணப்படுத்த வேண்டியது முக்கியம் – அல் ஹுசேன்

போரினால் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை சிறிலங்கா குணப்படுத்த வேண்டியது முக்கியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் ட்ரம்ப் – கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

ஐந்து இந்திய மாநிலங்களுடன் தனித்தனி வர்த்தக உடன்பாடுகள் – சிறிலங்கா திட்டம்

இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாடு நடைமுறையில் இருக்கும் நிலையில், எட்கா உடன்பாட்டையும் செய்து கொள்ளவுள்ள சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவின் ஐந்து மாநிலங்களுடன் தனித்தனியாக உடன்பாடுகளையும் செய்து கொள்ளவுள்ளது.