மேலும்

சஜித் கூட்டணி உருவாக்கும் நிகழ்வை புறக்கணிக்கிறார் ரணில்

சஜித் பிரேமதாச தலைமையில் இன்று கொழும்பில் நடைபெறவுள்ள சமாஜி ஜன பலவேகய கூட்டணியின் ஆரம்ப நிகழ்வை, ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க புறக்கணிக்கவுள்ளார்.

யானைக்கே ஐதேக செயற்குழு ஆதரவு – சஜித் முரண்டு

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கருத்து வெளியிட்ட நிலையில், இறுதியான முடிவு எடுக்கப்படாமல் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முடிவடைந்தது.

சிறிலங்காவில் கொரோனா கண்காணிப்பில் 16 பேர்

கொரோனா வைரஸ் எனப்படும், கொவிட் -19 தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிறிலங்காவில் 16 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தொற்று நோயியல் பிரிவின் பிந்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

கைக்கு வந்தது கலைக்கும் அதிகாரம்

நாடாளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்கின்ற அதிகாரம், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இன்று கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் 271,789 புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி

புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலில், 271,789 புதிய வாக்காளர்கள், வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று சிறிலங்கா தேசிய தேர்தல்கள் ஆணையத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சுங்க பணிப்பாளராக முன்னாள் இராணுவ அதிகாரி – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

சிறிலங்கா சுங்கப் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய இரண்டு ஆண்டுகளுக்கு மாத்திரமே, பதவியில் இருப்பார் என்று  சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தமக்கு உறுதியளித்துள்ளார் என்று சுங்க தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வேலைவாய்ப்பு நேர்காணல் குழுவில் இராணுவ அதிகாரிகள்

சிறிலங்கா அரசாங்கத்தின் ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களை நேர்காணல் செய்த குழுவில், சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தமை குறித்து, கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்

புதிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்காக, சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றம் நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

42 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் – தேர்தல் ஆணையம் பச்சைக்கொடி

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், 42 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை, பொது நிர்வாக அமைச்சு செயற்படுத்துவதற்கு, சிறிலங்காவின் தேசிய தேர்தல்கள் ஆணையம் பச்சைக்கொடி காண்பித்துள்ளது.

‘பொருளாதார வளர்ச்சிக்கு நல்லிணக்கம் முக்கியம்’ – பிரான்ஸ் இராஜதந்திரி

தண்டனையில் இருந்து தப்பிக் கொள்வதை, முடிவுக்குக் கொண்டு வந்து இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் பிரான்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது.