மேலும்

இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பல் – குழப்பமான தகவல்களை வெளியிடும் சிறிலங்கா கடற்படை

சோமாலிய கடற்கொள்ளையர்களால், கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பலின் மாலுமிகள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படை குழப்பமான- முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருகிறது.

மே மாதத்துக்கு முன் சிறிலங்கா முன்னேற்றத்தை காட்ட வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க முன்னதாக, மனித உரிமைகள்  தொடர்பாக உறுதியான முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

புலிகளுக்கான நிதி சேகரிப்பு தீவிரவாத செயற்பாடே – ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்

விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த நால்வர், தமது நடவடிக்கையை தீவிரவாதச் செயற்பாடு என்று வகைப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 94 பேர் கபொத சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 94 பேர் கபொத சாதாரண தரப் பரீட்சையில் கூட சித்தியடையாதவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தில் சிறிலங்கா இராணுவத் தளபதி

ஆறு நாட்கள் பயணமாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா நேற்று நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவைச் சென்றடைந்தார்.

8 இலங்கை மாலுமிகளுடன் எண்ணெய்க் கப்பல் கடத்தப்பட்டது

சிறிலங்கா மாலுமிகளுடன் இந்தியப் பெருங்கடலில் பயணித்த எண்ணெய்க் கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களினால், கடத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் இலங்கை மாலுமிகள் எட்டுப் பேர் இருந்தனர் என்று சிறிலங்கா கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

ஜப்பானின் இராட்சத நாசகாரி போர்க்கப்பல் சிறிலங்கா வருகிறது

ஜப்பானியக் கடற்படையின் மிகப்பெரிய உலங்குவானூர்தி தாங்கி, நாசகாரிப் போர்கப்பலான இசுமோ, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றவாளிகள் இப்போது மனித உரிமை காவலர்களாகி விட்டனர் – என்கிறார் கோத்தா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு, இணை அனுசரணை வழங்குவது சிறிலங்கா அரசாங்கத்தின் பலவீனம் என்று குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

31 ஆண்டுகளுக்குப் பின் சிறிலங்கா வருகிறார் தென்கொரிய வெளிவிவகார அமைச்சர்

தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பயுங் சே நாளை சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். தென்கொரியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு அவரது இந்தப் பயணம் அமையவுள்ளது.

சிறிலங்கா அதிபர் இந்தியா செல்லவில்லை – மறுக்கிறது அவரது செயலகம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பௌத்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக இந்தியா செல்வதற்குத் திட்டமிட்டுள்ளார் என்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகிய செய்தியை சிறிலங்கா அதிபர் செயலகம் நேற்று மறுத்துள்ளது.