மேலும்

அனைத்துலக நீதிபதிகளை அழைக்க அரசியலமைப்பில் இடமில்லை – கைவிரித்தது சிறிலங்கா

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு சிறிலங்காவின் அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை என்று சிறிலங்கா  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் பேரணிகள்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான நீதிப் பொறிமுறைகளில் அனைத்துலக நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு, கிழக்கு பகுதிகளில் நேற்று கவனயீர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட்டன.

வவுனியாவில் வதை முகாம் – சிறிலங்கா ஜெனரல்கள் 6 பேர் மீது குற்றச்சாட்டு

மிகக் கொரூரமான சித்திரவதைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் படைமுகாமை இயக்கிய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து ஜெனரல்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துமாறு, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறிலங்கா மாலுமிகளுடன் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு

சோமாலிய கடற்கொள்ளையர்களால் 8 சிறிலங்கா மாலுமிகளுடன் கடத்தப்பட்ட அரிஸ் -13 என்ற  எண்ணெய் தாங்கி கப்பல் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளதாக மொகடிசுவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிலங்கா குறித்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குமாறு நாடுகளை அழைக்கிறது அமெரிக்கா

சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் ஏற்படுத்துவதற்காக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குமாறு, நாடுகளுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது – மறுக்கிறது சிறிலங்கா

போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறுவோம் – அமெரிக்கா எச்சரிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கணிசமான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால், அமெரிக்கா அதில் தொடர்ந்து இணைந்திருக்காது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் றெக்ஸ் ரில்லர்சன் எச்சரித்துள்ளார்.

மிலேனியம் சவால் திட்டப் பணியகத்தை சிறிலங்காவில் அமைக்கிறது அமெரிக்கா

அமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு திட்டப் பணியகத்தை சிறிலங்காவில் அமைப்பதற்கு, அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

ஐ.நா பணியகத்துக்கு சிறிலங்காவில் இடமில்லை – அனைத்துலக சமூகம் தமது பக்கம் நிற்கிறதாம்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் செயலகம் ஒன்றை சிறிலங்காவில் அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்கவில்லை என்று பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியா நாடு கடத்திய 25 இலங்கை அகதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

அவுஸ்ரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 25 இலங்கை அகதிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.