மேலும்

வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணைகளில் பங்கேற்கமாட்டார்கள் – ஹர்ஷ டி சில்வா

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்றாலும், விசாரணைகளில் ஈடுபடமாட்டார்கள் என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

16 மாதங்களில் சிறிலங்கா கடற்படை ஈட்டியுள்ள 3 பில்லியன் ரூபா வருமானம்

கடந்த 16 மாதங்களில் வணிகக் கப்பல்களுக்கு அளித்து வந்த பாதுகாப்புச் சேவையின் மூலம், சிறிலங்கா கடற்படை, 3 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளது. காலியில் உள்ள நிலையத்தில் இருந்தே இந்த வருமானம் பெறப்பட்டுள்ளது.

நாடு திரும்பும் தொழிலாளர்கள் கொண்டு வரும் மேலும் 9 பொருட்களுக்கு தீர்வை விலக்கு

புலம்பெயர் தொழிலாளர்களால் சிறிலங்காவுக்குள் கொண்டு வரப்படும், மேலும் ஒன்பது பொருட்களுக்கான சுங்கத் தீர்வைகளை  முற்றாக அகற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மட்டக்களப்பு சிவில் விமான நிலையம் அடுத்த மாதம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமான நிலையமாக, அடுத்த மாத இறுதியில் திறந்து வைக்கப்படவுள்ளது என்று, சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் நிமலசிறி தெரிவித்துள்ளார்.

இந்திய- சிறிலங்கா கடற்படைகள் இணைந்து கூட்டு சமுத்திரவியல் ஆய்வு

சிறிலங்காவின் தெற்கு கடல் பகுதியில், இந்திய கடற்படையும், சிறிலங்கா கடற்படையும் இணைந்து, கூட்டு சமுத்திரவியல் ஆய்வை மேற்கொள்ளவுள்ளன.

சிறையில் உண்ணாவிரதம் இருந்த விமல் வீரவன்ச மருத்துவமனையில் அனுமதி

வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜெனிவா தீர்மானத்தை கண்காணிக்க 362,000 டொலர் தேவை – ஐ.நா மதிப்பீடு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, 362,000 டொலர் நிதி தேவைப்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தீவுக்காகப் போட்டி போடும் அமெரிக்கா- சீனா

ஆசியாவின் சிறிய நாடுகளில் ஒன்றான சிறிலங்காவில் உள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகமானது இந்திய மாக்கடலின் கேந்திர மையத்தில் அமைந்துள்ளது. சீனாவால் கட்டப்பட்ட இத்துறைமுகத்திற்கு இம்மாதத்தில், இரு வாரங்கள் வரை அமெரிக்க இராணுவத்தினர் வருகை தந்திருந்தனர்.

சந்தியா எக்னெலிகொடவுக்கு துணிச்சலான பெண் என்ற விருது வழங்குகிறது அமெரிக்கா

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு அமெரிக்கா துணிச்சலான பெண் என்ற அனைத்துலக விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.

எந்தவொரு படையினரையும் தண்டிக்கமாட்டோம் – சந்திரிகா

தமது உறவுகள் காணாமல்போக காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்குமாறு அவர்களின் உறவினர்கள் கோரவில்லை, எவ்வாறு காணாமல் போனார்கள் என்ற கேள்விக்கான பதிலையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.