மேலும்

ஜெனிவா தீர்மானத்தை கண்காணிக்க 362,000 டொலர் தேவை – ஐ.நா மதிப்பீடு

UNHRCஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, 362,000 டொலர் நிதி தேவைப்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

மார்ச் 23ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா குறித்த தீர்மானம் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்காகவே இந்த நிதி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு அமைய, 2019 ஆம் ஆண்டு வரை சிறிலங்காவில் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

நிலைமாறு கால நீதி, சட்டத்தின் ஆட்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கண்காணிப்பை மேற்கொள்வதற்கு, தலா 14 நாட்களைக் கொண்ட, ஆறு பயணங்களை ஐ.நா அதிகாரிகள் சிறிலங்காவுக்கு மேற்கொள்ள வேண்டும்.

இதன் அடிப்படையில் ஜெனிவா தீர்மானத்தின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றிய எழுத்துமூல அறிக்கையை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரிலும், விரிவான அறிக்கையை 40ஆவது கூட்டத்தொடரிலும், ஐ.நா மனித உரிமை ஆணையயாளர் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *