மேலும்

வெளிநாட்டு தூதரகம் குழப்பியதா? – விசாரணை நடத்த சிறிலங்கா பிரதமர் உத்தரவு

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு குறித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடக்கவிருந்த விவாதம் குழப்பப்பட்டதன் பின்னணியில் வெளிநாட்டு தூதரகம் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் சீன பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

சிறிலங்காவில் உள்ள சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வேய் நேற்று சிறிலங்கா பாதுகாப்பு செயலர், கபில வைத்தியரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ரக்ன லங்கா, அவன்ட் கார்ட் நிறுவன தலைவர்கள் மீது 47 குற்றச்சாட்டுகள்

ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் பாலித பெர்னான்டோ, மற்றும் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் புலிகள் மீது பழி போட முடியாது- சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கில் நடக்கும் எல்லா சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளைக் குற்றம்சாட்ட முடியாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவில் இருந்து இராணுவத் தலைமையகத்தை அகற்ற சிறிலங்கா அரசாங்கம் முடிவு?

கேப்பாப்புலவில் இருந்து முல்லைத்தீவு இராணுவத் தலைமையகத்தை அகற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவ பிரதித் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ

சிறிலங்கா இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

13 இலங்கையர்களை நாடு கடத்தியது அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட 13 இலங்கையர்கள் நேற்றுக் காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

‘அம்மாச்சி’ க்கு சிங்களப் பெயர் சூட்டச் சொல்கிறது சிறிலங்கா அரசு – முதலமைச்சர் குற்றச்சாட்டு

தமிழ்மக்களின் பாரம்பரிய உணவு வகைகளை ஊக்குவிக்கும் வகையில், வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் திறக்கப்பட்ட அம்மாச்சி உணவகங்களுக்குச் சிங்களத்தில் பெயர் சூட்டுமாறு சிறிலங்கா அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் அறிக்கை குறித்து விசாரிக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு

வடகொரியா நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து விசாரணை நடத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

மைத்திரி- ரணில் இணைந்து செயற்பட வேண்டும் – சம்பந்தன்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டுக்காக, தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.