மேலும்

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை விட்டு வெளியேறுகிறது தமிழ் அரசுக் கட்சி

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையில் இருந்து முழுமையாக வெளியேறுவதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலோபாய, பாதுகாப்பு தேவைக்கு சிறிலங்காவை பயன்படுத்தமாட்டோம்- சீன தூதுவர் உறுதி

இந்தியப் பெருங்கடலில் சிறிலங்காவில் கேந்திர அமைவிடத்தை, சீனா தனது மூலோபாய மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாது என்று, சிறிலங்காவுக்கான சீன தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.

ரவி கருணாநாயக்கவுடன் ரணில் இரகசிய ஆலோசனை

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளார் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

சீன கடற்படையின் மிதக்கும் மருத்துவமனை கொழும்பு வந்தது

நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக, சீன கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான, ஹெபிங்பாங்சோ நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 178 மீற்றர் நீளமும், 24 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பலில், 381 மாலுமிகள் உள்ளனர்.

நிச்சயம் எதிர்த்து வாக்களிப்பேன் – மகிந்த

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை குற்றம்சாட்டவில்லை – முதலமைச்சர் குத்துக்கரணம்

வடக்கிலும் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று தாம் கூறியது முன்னாள் போராளிகளை அல்ல என்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம் – காலி, தங்காலை தளங்களை மூடும் சிறிலங்கா கடற்படை

காலி மற்றும் தங்காலையில் அமைந்துள்ள சிறிலங்கா கடற்படைத் தளங்கள் அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படவுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு கையெழுத்திடப்பட்டதை அடுத்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கொக்குவில் வாள்வெட்டு – மற்றொரு இளைஞனும் கைது

கொக்குவிலில் கடந்த மாதம் 30 ஆம் நாள், இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், மற்றொரு இளைஞனைக் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அமைச்சரவையை மாற்றியமைக்க முதலமைச்சருக்கு அதிகாரம் – கூட்டமைப்பு கட்சிகள் வழங்கின

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை, முதலமைச்சர் தமது தற்துணிபு மற்றும் சட்டரீதியான அதிகாரங்களின் அடிப்படையில் மாற்றியமைப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

வெளிவிவகார அமைச்சரரை பதவி விலகக் கோரினார் சிறிலங்கா அதிபர்? – மறுக்கிறார் ரவி

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரியிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.