மேலும்

பெப்ரவரி 7 நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகள் அனைத்தும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் நாள் நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்  என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சிறிலங்கா மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்படும் – ரஷ்யா

சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தாவர உற்பத்திகளின் மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என்று ரஷ்யாவின், விவசாய மற்றும் விலக்குகள் கண்காணிப்பு அமைப்பான, Rosselkhoznadzor இன் தலைவர், சேர்ஜி டாங்க்வேர்ட் தெரிவித்துள்ளார்.

மொட்டு சின்னத்தில் போட்டியிடும் கிரிமினல் குற்றவாளிகள்

மகிந்த ராஜபக்ச ஆதரவு சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், குற்றவாளிகளும், ஊழல் செய்தவர்களும் இடம்பெற்றிருப்பதாக, சிறிலங்கா அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

ரிரிவி தினகரன் – சுமந்திரன் சந்திப்பு

தமிழ்நாட்டில், சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, பெருவெற்றியைப் பெற்றுள்ள ரிரிவி தினகரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம், இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.

சிறிலங்கா தேயிலை மீதான தடையை நீக்கியது ரஷ்யா

சிறிலங்காவில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு விதித்திருந்த தற்காலிக தடையை நீக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

அகங்காரவாதமும், அபிலாசைகளும்

அரசியல் அபிவிருத்தி  என்பது  ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வளர்ச்சி கொண்டிருக்கிறது என்பது அறியப்படாத விடயமாக இருக்கிறதா ?  அல்லது  கைவிடப்பட்ட ஒரு துறை போல் காணப்படுகிறதா? என்பது சமூக அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ள  கேள்வியாக உள்ளது.

சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தோல்வி – காங்கிரஸ்

சிறிலங்கா தொடர்பான வெளிவிவகாரக் கொள்கையில், நரேந்திர மோடி அரசாங்கம் தோல்வியடைந்து விட்டதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

சம்பந்தனிடம் நலம் விசாரித்தார் மகிந்த

உடல்நலக் குறைவினால், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

அஞ்சல் மூல வாக்களிப்பு ஜனவரி 25ஆம், 26ஆம் நாள்களில்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி 25ஆம், 26ஆம் நாள்களில் நடைபெறும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மாலிக்குப் புறப்பட்டது சிறிலங்கா இராணுவத்தின் முதலாவது அணி

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக, 150 படையினரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தின் முதலாவது அணி நேற்றுக்காலை புறப்பட்டுச் சென்றது.