மேலும்

சிறிலங்கா கடற்படைத் தளபதி இந்தியாவில் நான்கு நாட்கள் பயணம்

சிறிலங்கா  வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, நான்கு நாட்கள் இந்தியாவில் அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் எஸ்எம்ஜி நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பில் காலமான ஈழத்தின் மூத்த ஊடகவியலாளரும், ஈழநாடு, ஈழநாதம், தினக்கதிர் போன்ற நாளிதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவருமான எஸ்எம்ஜி, கோபு என் அழைக்கப்படும் எஸ்.எம்.கோபாலரட்ணம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றது.

வடக்கில் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு இடமில்லை – யாழ். படைகளின் தளபதி

விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வெறும் வதந்தியே,  வடக்கில் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு இடமில்லை என்பதை சிறிலங்கா இராணுவம் திடமாக நம்புகிறது என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

வடக்கு முதல்வர் – மலேசியப் பிரதமர் சந்திப்பைத் தடுக்க முயன்ற சிறிலங்கா அரசு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மலேசியப் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக் சந்திப்பதைத் தடுக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிதம்பரத்துக்கு யாத்திரிகளை அனுப்ப கப்பலைத் தேடும் ஆளுனர்

தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் மார்கழித் திருவாதிரைத் திருவிழாவில் பங்கேற்பதற்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.

மீண்டும் ஐதேகவில் இணைகிறார் ரம்புக்வெல?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்ளவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தது ஜனநாயகப் போராளிகள் கட்சி

உள்ளூராட்சித் தேர்தலில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து, ஜனநாயகப் போராளிகள் கட்சி போட்டியிடுவதாக, தமிழ் அரசுக் கட்சியின் இணைச்செயலரும், வடமாகாணசபை அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

ரஷ்ய- சிறிலங்கா இராஜதந்திர உறவுகளில் குழப்பம் – அஞ்சல் தலை வெளியீடு இடைநிறுத்தம்

ரஷ்ய- சிறிலங்கா இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 60 ஆவது ஆண்டை முன்னிட்டு, சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்படவிருந்த சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் – இரண்டாவது கட்டத்தில் 1553 வேட்புமனுக்கள் ஏற்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இரண்டாவது கட்டமாக 1553 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொட்டுக்காக பரப்புரை செய்தால் கட்சியை விட்டு நீக்குவோம்- மகிந்தவுக்கு சுதந்திரக் கட்சி எச்சரிக்கை

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக- சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பரப்புரைகளை மேற்கொண்டால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க எச்சரித்துள்ளார்.