மேலும்

நல்லிணக்கம் சிறிலங்காவின் போர்க்காயங்களை குணப்படுத்துமா?

25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக கடந்த மாதம் தனது சொந்தக் காணிக்குச் சென்ற பரமேஸ்வரி உதயகுமாரன் மிகவும் அதிர்ச்சியுற்றார். பரமேஸ்வரியின் சொந்த இடம் பளை வீமன்காமம். இவரது வீட்டில் எவ்வித தளபாடங்களும் காணப்படவில்லை.

ஐ.நா அறிக்கையை மகிந்த சாதகமாக்கிக் கொள்ளலாம் – மேற்குலக நாடுகள் கவலை

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் நாள் தீர்மானிக்கப்பட்டதில், ஐ.நாவின் விசாரணை அறிக்கையும் முக்கிய பங்காற்றியதாக சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கை சின்னத்தில் தனித்துக் களமிறங்கப் போகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அதன் கை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து, தீவிரமான உள்ளக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே தொடருந்துப் பாலம் அமைக்க இந்தியா திட்டம்

இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில், தொடருந்துப் பாலம் ஒன்றை அமைக்கும் திட்டம் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, இந்திய மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல்துறை அமைச்சர் பொன் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மேர்வின், சஜின், துமிந்தவுக்கு சுதந்திரக் கட்சி வேட்புமனு மறுப்பு – ஒதுங்குகிறார் சனத் ஜெயசூரிய

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மேர்வின் சில்வா, சஜின் வாஸ் குணவர்த்தன, துமிந்த சில்வா ஆகியோருக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பளிக்கப்படமாட்டாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்தவுக்கு இடமளிக்கமாட்டேன் – சந்திரிகாவுக்கு மைத்திரி வாக்குறுதி?

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வாய்ப்பளிக்க மாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் – வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று தொடக்கம் தேர்தல்கள் திணைக்களத்தினால் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இன்று இறுதி முடிவு – அனந்திக்கு வேட்புமனு நிராகரிப்பு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளுக்கிடையில் இன்று இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.

நிச்சயமற்ற நிலையில் மகிந்த – அனுராதபுர கூட்டம் திடீரென ஒத்திவைப்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மேடையேறவிருந்த அனுராதபுர கூட்டம் திடீரெனப் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரமாக சந்திக்க மேற்குலக தூதுவர் முயற்சி – நழுவுகிறார் மைத்திரி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளித்ததையடுத்து, எழுந்துள்ள புதிய அரசியல் சூழல் குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்த மேற்கு நாட்டு இராஜதந்திரிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.