வேண்டா வெறுப்பாக ரணிலை பிரதமராக நியமித்த சிறிலங்கா அதிபர்
சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தைக் கலைத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு அரசியலமைப்புக்கு, எதிரானது, என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.
தற்போதைய அரசியல் நெருக்கடியை வெளிப்படையான முறையில், ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்காவையும், அதன் தலைவர்களையும் ஒரு நண்பராகவும், பங்குதாரராகவும், நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில், தாம் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
கோத்தாவை அடுத்த அதிபர் தேர்தலில் நிறுத்தினால், அவர் இரண்டாவது பதவிக்காலத்தையும் பெற்றுக்கொள்வார் என்று மகிந்த ராஜபக்ச அஞ்சுகிறார் என, சிறிலங்காவின் பிரபல சட்ட நிபுணரான கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு இருந்த தொடர்புகளை, தொலைபேசி தொடர்புகளின் மூலமே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
பத்து வருடங்களாகச் சிறையில் வாடும்- ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மனைவியின் இறுதி நிகழ்வு, உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதை உலுக்கியிருக்கிறது.
ஒற்றையாட்சி முறைமை நீடிக்கும் வரை எங்களால் சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Huffington post என்ற அனைத்துலக ஊடகத்துக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
போர் வெற்றி வீரர்களை நீதியின் முன் நிறுத்தமாட்டோம் என்று எவரும் கூற முடியாது. போர் வெற்றி வீரர்களை பாதுகாப்பதாக கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை மீறுவதாகும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார்.
யாழ். அரியாலை கிழக்கு, மணியம்தோட்டம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு மரணமானார். இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.