மேலும்

பிரிவு: செய்திகள்

பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்கவை 3 நாட்கள் சிஐடியினர் விசாரிக்க அனுமதி

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதித்துறையின் கரங்களை கட்டிவைத்துள்ள சட்டமா அதிபர் – ஐ.நா நிபுணர் குற்றச்சாட்டு

சிறிலங்கா நீதித்துறையின் கரங்களை சட்டமா அதிபர் கட்டி வைத்திருப்பதாக சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதர்ப்புக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் குற்றம்சாட்டியுள்ளார்.

வரலாற்றுப் பழி சுமக்குமா கூட்டமைப்பு?

பௌத்த பீடங்கள் மற்றும் சங்க சபாக்களின் ஒருங்கிணைந்த கூட்டத்தில், புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு மாற்றத்துக்கு எதிரான முடிவு எடுக்கப்பட்ட பின்னர், அரசாங்கத்தின் உள்ள தலைவர்கள் அனைவரும் ஒற்றையாட்சி புராணத்தைப் படிக்கத் தொடங்கியுள்ளனர்.

போட்டுக் கொடுத்தார் அட்மிரல் கரன்னகொட – சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் பலர் விரைவில் கைது

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட வழங்கிய தகவல்களின் அடிப்படையில், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த மேலும் பலர் அடுத்து வரும் வாரங்களில் கைது செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க நாளை ஊர்காவற்றுறை நீதிமன்றில் நிறுத்தப்படுவார்

நீண்ட நேர விசாரணைகளுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட, சிறிலங்கா காவல்துறையின் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க நாளை, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கடற்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர்

2008ஆம் ஆண்டு கொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க, வெலிசறையில் உள்ள சிறிலங்கா கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட 7 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை மீது உன்னிப்பான கண்காணிப்பு

பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை உன்னிப்பாக கண்காணிக்க, சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட விடமாட்டேன் – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

தேசிய பாதுகாப்பை எப்போதும் உறுதி செய்வேன் என்றும்,  தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இந்திய- சிறிலங்கா விமானப்படையினர் கூட்டுப் பயிற்சி

அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, இந்திய விமானப்படையினர் வான்வழி தரையிறக்கப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஜூலை 9ஆம் நாள் தொடக்கம், 14ஆம் நாள் வரை இந்தப் பயிற்சிகள் இடம்பெற்றன.

இராஜதந்திர தகைமையோ, அடிப்படை நாகரீகமோ இல்லாதவர் – ஐ.நா நிபுணரை சாடும் விஜேதாச

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் எந்வொரு இராஜதந்திர தகைமையையோ, அடிப்படை நாகரீகத்தைக் கொண்டவரோ அல்ல என்று சிறிலங்காவின் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறியுள்ளார்.