கடன்பொறிகள் நிறைந்த சீனாவின் பட்டுப்பாதை
சீனாவின் பட்டுப்பாதைகள் மற்றும் கரையோரப் பட்டுப் பாதைகள் போன்றன இதன் வர்த்தகப் பாதைகள் அமைந்துள்ள மத்திய ஆசியா மற்றும் இந்திய மாக்கடலிற்குக் குறுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. பட்டு என்பது சீனாவின் வர்த்தகச் செயற்பாட்டில் மிகச் சிறிய பங்கையே கொண்டுள்ள போதிலும் இது சீனாவின் அடிப்படை வர்த்தகச் செயற்பாடாகக் காணப்படுவதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.



