மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

நம்பிக்கையில்லா பிரேணையை மீளப்பெறுமாறு சிறிலங்கா பிரதமர் உத்தரவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆறு பேர் மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோருக்கு எதிராக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெறுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடினர்.

16 – 23 ஆக பிளவுபட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தியுள்ளது.

தோல்வியும் வெற்றி தான் – என்கிறார் மகிந்த

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தாலும், தமக்கு வெற்றியே என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்குமாம் – குழப்பும் அமைச்சர்கள்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விடயத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.

கூட்டணிக் கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், அதனை எதிர்த்து வாக்களிக்க, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐதேகவின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் முடிவு செய்துள்ளன.

ரணில் பதவி விலக வேண்டும் – சுதந்திரக் கட்சி நாடாளுமன்றக் குழு முடிவு

நம்பிக்கையில்லா பிரேரணை நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து விலகுமாறு கோருவதென, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு  தீர்மானித்துள்ளது.

சிவசக்தி ஆனந்தனின் வாக்கு யாருக்கு? – முடிவெடுப்பாராம் சுரேஸ்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களிப்பது தொடர்பாக, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனே முடிவு செய்வார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ரணிலைக் காப்பாற்றுமா கூட்டமைப்பு?- கொழும்பில் மந்திராலோசனை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிரணியின் மிகமுக்கிய பிரமுகர் ரணிலை கவிழ்க்க உதவமாட்டார்?

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியைச் சேர்ந்த மிக முக்கிய பிரமுகர் ஒருவர் அதில் பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது.