மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

கூட்டமைப்புக்கு வாக்களித்த உறுப்பினர்களை நீக்குகிறார் சங்கரி – வேலணையில் விடயத்தில் மௌனம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கவுள்ளதாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

2019இல் ஜெனிவாவுக்கான கதவுகளை மூடுகிறது சிறிலங்கா

ஜெனிவாவுக்கான கதவுகளை மூட விரும்புவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சிறப்புப் பணிகள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம,

உதயங்க வீரதுங்க டுபாயில் மீண்டும் கைது – கொழும்புக்கு கொண்டு வருவதற்கு முயற்சி

ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, டுபாயில் நேற்றுக்காலை அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2019 மார்ச் மாதத்துக்குப் பின்னர் அமெரிக்காவின் மனித உரிமை நிகழ்ச்சி நிரலுக்குள் சிறிலங்கா

2019 மார்ச் மாதத்துக்குப் பின்னர், சிறிலங்காவை, தனது மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்குள் அமெரிக்கா கொண்டு வரும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகாசோன் படையணித் தலைவரைச் சந்தித்தார் ஞானசார தேரர்

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறைகளைத் தூண்டி விட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மகாசோன் படையணியின் தலைவர் மற்றும், செயற்பாட்டாளர்களை பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தேமம ஞானசார தேரர் சந்தித்துள்ளார்.

சிறிலங்காவின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவுக்குப் பயணம்

சிறிலங்காவின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு, ஒன்பது நாட்கள் பயணமாக இன்று சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளது.

வட மாகாண ஆளுனராக கே.சி.லோகேஸ்வரன் – “முதல் தமிழர்”

மேல் மாகாண ஆளுனராகப் பணியாற்றும், கே.சி.லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுனராக, நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சார்க் மாநாட்டை நடத்த சிறிலங்காவிடம் ஒத்துழைப்புக் கோருகிறது பாகிஸ்தான்

அடுத்த சார்க் மாநாட்டை பாகிஸ்தானில் நடத்த சிறிலங்கா ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று, பாகிஸ்தான் அதிபர் மமூன் ஹுசேன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கைப் பிரேரணை – 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் 80இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியோரின் குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு

யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்திக்க மறுத்து விட்டார் என்று வெளியான செய்திகளை சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு ஆதாரங்களுடன் மறுத்துள்ளது.