கிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது
கிளிநொச்சிப் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிளிநொச்சிப் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். ஏற்கனவே ஆளுனர்களாக இருந்தவர்களே உள்ளக இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15ஆம் நாள் வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் , கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக, ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கும், அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கும், வடக்கு மாகாணசபையில் முடிவு செய்யப்பட்டிருந்த போதும், இன்றைய போராட்டங்களில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தின் வசமுள்ள 683 ஏக்கர் காணிகள் வரும் 16ஆம் நாள் விடுவிக்கப்படவுள்ளாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்துள்ளனர்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தமை தொடர்பாக கூட்டு எதிரணிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போது, சூடான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.