சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது.
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது.
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், சாட்சியை அச்சுறுத்தும் வகையிலும், நடந்து கொண்ட குற்றச்சாட்டில் சிறைத்தண்டனையை அனுபவிக்கும் ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பொது பலசேனா அறிவித்துள்ளது.
கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் வளங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, நோர்வேயின் ஆய்வுக் கப்பலான, Dr Fridtjof Nansen சிறிலங்காவுக்கு வரவுள்ளது.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பொது பலசேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரர், சிறைக் கைதிகளுக்கான உடையை அணியவில்லை என்று சிறைச்சாலை வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்து சமய விவகார பிரதி அமைச்சர் பதவி, காதர் மஸ்தானிடம் இருந்து மீளப் பெறப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, மேன்முறையீட்டு மனு ஓகஸ்ட் மாதம் 2ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரான ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் சிசிர மென்டிசிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
லங்கா இ நியூஸ் ஆசிரியர் பிரதீப் சந்துருவன் சேனாதீரவை, கைது செய்யுமாறு அல்லது சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புமாறு பிரித்தானியத் தூதுவரிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கோரினார் என்று வெளியான செய்திகளை அதிபரின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார் என்று, முன்னாள் இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.