ஐ.நா அமைதிப்படையில் பணியாற்ற சிறிலங்கா படையினருக்கு அனுமதி அளிப்பதில் இழுபறி
சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்காததால், ஐ.நா அமைதிப்படையில் பங்கேற்பதற்காக சிறிலங்கா இராணுவத்தின் மற்றொரு அணி புறப்படுவதில் தொடர்ந்தும் இழுபறி நீடிக்கிறது.
சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்காததால், ஐ.நா அமைதிப்படையில் பங்கேற்பதற்காக சிறிலங்கா இராணுவத்தின் மற்றொரு அணி புறப்படுவதில் தொடர்ந்தும் இழுபறி நீடிக்கிறது.
அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டால், அவரை அமெரிக்கா ஆதரிக்காது என்று, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கூறியதாக வெளியான செய்திகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச முற்றாக நிராகரித்துள்ளார்.
இன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ச முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான, வண.வென்டருவே உபாலி தேரர்.
முன்னைய அரசாங்கம் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததால், தற்போதைய அரசாங்கம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, சிறிலங்காவுக்குச் சாதகமாக இருக்கும் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான இறுதிக்கட்ட குத்தகைக் கொடுப்பனவை சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நேற்று சிறிலங்கா அரசாங்கத்திடம் வழங்கியுள்ளது.
ஞானசார தேரருக்கு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தனியான சலுகைகள் வழங்கப்படாது என்றும், ஏற்கனவே தண்டனை அனுபவிக்கும் 15 பௌத்த பிக்குகளைப் போன்றே அவரும் சாதாரண கைதியாகத் தான் நடத்தப்படுவார் என்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தென்கொரியாவின் உதவியுடன் நான்கு பல நோக்கு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் மூன்று வடக்கில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
வடக்கில் சிறிலங்கா படையினர் வசமிருந்த 120.89 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக, நேற்று அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
காங்கேசன்துறை – மயிலிட்டி இறங்குதுறைக்கு அருகே தரை தட்டி நிற்கும் கப்பலில் ஏற்பட்ட தீ நேற்று நண்பகலுக்குப் பின்னர் முற்றாக அணைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.