மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

பிரதி அமைச்சர் பதவிக்காக மகிந்தவின் பக்கம் தாவினார் கூட்டமைப்பு எம்.பி வியாழேந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், கட்சி தாவி, மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அரசியல் குழப்பங்களில் சீனாவின் தலையீடு இருப்பதாக தெரியவில்லை என்கிறார் சரத் பொன்சேகா

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடியில் சீனாவின் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

விலைகள் குறைப்பு, பொருளாதார சலுகைகள் அறிவிப்பு – மகிந்தவின் புதிய உத்தி

மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட வழிமுறை தொடர்பாக கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்புகளும் தோன்றியுள்ள நிலையில், சிறிலங்காவின் புதிய அரசாங்கம் பொருளாதார சலுகைகளை அறிவித்து வருகிறது.

இன்றும் அமைச்சர்கள், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள்,  இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர்.

பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டியது கட்டாயமல்ல – மகிந்த சமரசிங்க

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கூட்டினாலும் கூட, புதிய அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று, அரசாங்க இணைப்பேச்சாளரும், அமைச்சருமான மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்தவை சபாநாயகர் ஏற்கவில்லை – ஐதேக

சிறிலங்காவின் பிரதமராக, மகிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்றுக் கொள்ளவில்லை என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

திங்களன்று நாடாளுமன்றைக் கூட்டுகிறார் மைத்திரி – அழுத்தங்களுக்கு அடிபணிந்தார்

அனைத்துலக அழுத்தங்களை அடுத்து, சிறிலங்கா நாடாளுமன்றத்தை வரும் நொவம்பர் 5ஆம் நாள்- திங்கட்கிழமை – கூட்டுவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.

அரசியலமைப்பு வரைவை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் – எல்லே குணவன்ச

முன்னைய அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவை, மைத்திரி- மகிந்த அரசாங்கம் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் நாடாளுமன்றத்தைக் கலைக்கத் திட்டம்?

சிறிலங்காவின் புதிய அரசாங்கம், நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைக்கும், ‘உள்ளார்ந்த அதிகாரங்களை’ கொண்டிருக்கிறார் என்று, சிறிலங்காவின் கல்வி உயர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மைத்திரி – மகிந்த கூட்டுக்கு எதிராகப் பலம் காட்டியது ஐதேக

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த, சிறிலங்கா அதிபருக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டக் கோரியும், கொழும்பில் ஐதேக இன்று பாரிய பேரணியை நடத்தி வருகிறது.