பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார பதவி விலகி மீண்டும் ரணிலுடன் இணைந்தார்
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அண்மையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பதவி விலகியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அண்மையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பதவி விலகியுள்ளார்.
அட்டையை விட வண்ணத்துப் பூச்சியை நான் விரும்புகிறேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடனான தமது கூட்டணியை எவராலும் பிரிக்க முடியாது என்று சவால் விடுத்துள்ளார், புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச.
தனக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சித்தார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டு, கட்சி தாவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை பதவியில் இருந்து நீக்குமாறு, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் பரிந்துரைத்துள்ளார்.
‘ஜன மகிமய’ என்ற பெயரில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று கொழும்பில் பாரிய பேரணியை நடத்தவுள்ளது. பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஆதரவு தெரிவித்தே, இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்து வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இப்போது அவர்களை விடுவிக்கவுள்ளது, முற்றிலும் அரசியல் சந்தர்ப்பவாதம் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளை விடுவிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவும் தயாராக இருப்பதாகவும், இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பான, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சி இன்று நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளித்துள்ளது.