மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சிறிலங்கா அதிபரிடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

சிறிலங்காவின் நிலைமைகள் திடீரெனச் சீரழிந்துள்ளமை, அமைதியின்மைக்கும், உறுதியற்ற நிலைக்கும் வழிவகுக்கும் என்பதால், நாடாளுமன்றத்தை உடனடியாக மீளக் கூட்டுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

அரசியல் குழப்பத்தினால் அங்குமிங்கும் தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த, மலையக மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

ரணிலுக்கு சீனா அளித்துள்ள உத்தரவாதம்

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகளில், தாம் தலையீடு செய்யமாட்டோம் என்று சீனா தமக்கு உத்தரவாதம் அளித்துள்ளது என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிறிலங்காவில் இன்று முதல் இரண்டு பிரதமர் செயலகங்கள் – மகிந்தவும் பொறுப்பேற்கிறார்

சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச இன்று அதிகாரபூர்வமாக பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தப் பதவியும் வேண்டாம்- கோத்தா நிராகரிப்பு

மைத்திரிபால சிறிசேன- மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் தாம் எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சபாநாயகருக்கு சம்பந்தன் அவசர கடிதம்

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரணிலை பதவியில் இருந்து நீக்கியது ஏன்?- சிறிலங்கா அதிபர் விளக்கம்

ரணில் விக்கிரமசிங்கவுடனான முரண்பாடு, பொருளாதார நெருக்கடி மற்றும், தன்னைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் அமைச்சர் ஒருவருக்கு இருந்த பங்கு என்பனவற்றினாலேயே மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்க தான் முடிவெடுத்தேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு பணியகத்துக்கு சீல் – மைத்திரியின் அதிகாரிகள் அதிரடி

காவல்துறை அதிகாரிகளுடன் சென்ற சிறிலங்கா அதிபர் செயலக அதிகாரிகள், குழுவொன்று, சுகாதார அமைச்சின் பணியகத்தை நேற்று முத்திரையிட்டு மூடியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாளை காலை அமைச்சரவையைக் கூட்டுகிறார் ரணில்

சிறிலங்காவின் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாளை அலரி மாளிகையில் போட்டி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.

ஜேவிபியின் ஆதரவு யாருக்கும் இல்லை

அரசாங்கத்தை அமைக்கும் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று ஜேவிபி முடிவு செய்துள்ளது. ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.