மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் ஞானசார தேரர் அனுமதி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹோமகம நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2015இல் சுமார் 4 இலட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு

2015ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் எண்ணிக்கை 376,412 ஆல் அதிகரித்துள்ளதாக, சிறிலங்காவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகமட் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் குடிநீர் பிரச்சினைக்கு இரணைமடு திட்டம் தான் ஒரே தீர்வு- அமைச்சர் ஹக்கீம்

இரணைமடுக் குளத்தின் அணைக்கட்டை இரண்டு அடி அதிகரித்து. அங்கிருந்து குடிநீரை விநியோகிப்பது தான், சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினைக்கு நடைமுறைச்சாத்தியமான ஒரே தீர்வு என்று சிறிலங்காவின் நகர திட்டமிடல், நீர்விநியோக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

புதிய போர்க்கப்பல்களை வாங்குகிறது சிறிலங்கா கடற்படை

சிறிலங்கா கடற்படையில் அடுத்த ஆண்டு இரண்டு புதிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் இணைத்துக் கொள்ளப்படும் என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் ஒருமைப்பாடு, இறைமையை இந்தியா பாதுகாக்கும் – வை.கே.சின்ஹா

சிறிலங்காவின் பாதுகாப்பு மீது இந்தியா நிலையான ஆர்வத்தைக் கொண்டிருப்பதாகவும், சிறிலங்காவின் ஒற்றுமை, இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்க உறுதிபூண்டிருப்பதாகவும், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு பெப். 9ஆம் நாள் வரை விளக்கமறியல் – ஹோமகம நீதிமன்றத்தில் பதற்றம்

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளதாகியுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரரை அடுத்த மாதம் 9ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்துக்கு நெருக்கடி கொடுத்த அரச சட்டவாளர் பிரகீத் வழக்கில் இருந்து நீக்கம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கை நடத்திய வந்த அரச சட்டவாளர் திலீப் பீரிஸ் இன்று காலை திடீரென அந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பதில் சட்டமா அதிபர் சுகத கம்லத் இதுபற்றி இன்று காலை அறிவித்துள்ளார்.

ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தும்படி, ஹோமகம நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் வரும் வரை அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை?

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றான புதிய சட்டம் கொண்டு வரப்படும் போது, சிறைகளில் உள்ள பல தமிழ் கைதிகளை விடுவிக்க முடியும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் இதயத்தை வென்றால் மட்டுமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்- சிறிலங்கா அதிபர்

உட்கட்டமைப்பு அபிவிருத்தியால் மட்டும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது என்றும், தமிழ் மக்களின் இதயங்களை வெற்றி கொள்வதன் மூலமே அதனை அடைய முடியும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.