மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தது சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி இன்று ஐக்கிய தேசிய முன்னணியுடன், கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது. 

தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு மகிந்த கடும் எதிர்ப்பு

நாளை நடக்கவுள்ள சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் நிகழ்வில், தமிழிலும் தேசிய கீதம் பாடப்படுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க வரவில்லையாம் ஹுசேன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் நோக்கில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புக்கூற அரசியலமைப்பில் இடமில்லை – சிறிலங்கா பிரதமர்

வெளிநாட்டு நீதிபதிகள், தீர்ப்புகளை வழங்குவதற்கு சிறிலங்காவின் அரசியலமைப்பில் இடமளிக்கப்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவைக் கலைக்க வேண்டும் – நிமால் சிறிபால டி சில்வா

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவை உடனடியாக கலைத்து விட வேண்டும் என்று, சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா  தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை உணவைச் சாப்பிட மறுக்கும் யோசித ராஜபக்ச

நிதிமோசடிக் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, யோசித ராஜபக்ச உள்ளிட்ட நால்வர், சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவை உண்ண மறுப்பதாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

அடுத்து கம்பி எண்ணப்போவது தானே என்கிறார் மகிந்த

அடுத்ததாக தன்னையே அரசாங்கம் கைது செய்யவுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று, தலதா மாளிகையில் வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

யோசித ராஜபக்ச இன்னமும் நிரபராதி தான் – என்கிறது சிறிலங்கா கடற்படை

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லெப்.யோசித ராஜபக்ச மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை, அவருக்கு எதிராக கடற்படை நடவடிக்கை எதையும் எடுக்காது என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

வெலிக்கடைச் சிறையில் யோசிதவுக்கு சிறப்பு வசதிகள் இல்லை

வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்சவுக்கு, மேலதிக பாதுகாப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், எந்தவிதமான மேலதிக சிறப்பு வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும், சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிங்கத்தின் வாலைப் பிடித்திருக்கிறீர்கள் – மகிந்தவின் இளைய மகன் எச்சரிக்கை

தனது சகோதரனான யோசித ராஜபக்சவைக் கைது செய்துள்ள சிறிலங்காவின் நல்லாட்சி அரசாங்கத்துக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளார் மகிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோகித ராஜபக்ச.