மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

யோசித ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லெப்.யோசித ராஜபக்ச இன்று மீண்டும் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போது, அவரை வரும் பெப்ரவரி 25ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த மூவருக்கு 79 வங்கி, நிதி நிறுவனங்களில் கணக்குகள்

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது. அவரது பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த, மூன்று இராணுவ அதிகாரிகளின் 79 வங்கி மற்றும் நிதி நிறுவனக் கணக்கு விபரங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலப்பு நீதிமன்றத் திட்டம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறதாம் – கலங்குகிறார் மகிந்த

சிறிலங்காவில் கலப்பு நீதிமன்ற விசாரணை பற்றிய திட்டம் இன்னமும் உயிர்ப்புடனேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

அடுத்த மாதம் பங்களாதேஸ் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம், பங்களாதேசுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக, டாக்காவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்புக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்காது – செயிட் ராட் அல் ஹுசேன்

போர்க்குற்ற விசாரணைகளில், அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்றுக் கொள்ளுமாறு சிறிலங்காவுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்காது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரைப் பிணையில் விடுவித்தது நீதிமன்றம் – ஆனாலும் நாளை வரை விளக்கமறியல்

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை ஹோமகம நீதிமன்றம் இன்று பிணையிில் செல்ல அனுமதித்துள்ளது.

சிறிலங்கா அதிபர், பிரதமரைத் தனித்தனியாகச் சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இன்று காலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் சரத் பொன்சேகா

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான,  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று பிற்பகல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு – ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கருத்துக்கு விளக்கம்

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுவதை விரும்பவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் கருத்து வெளியிட்டதாக வெளியான செய்தி தொடர்பாக, ஐ.நா பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் விளக்கமளித்துள்ளார்.

சிறைக்குள் யோசிதவிடம் கைத்தொலைபேசி – விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ச, சிறைக்கூண்டில் கைத்தொலைபேசி பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.