மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

புதிய கட்சி அமைக்கிறது மகிந்த அணி – நேற்றிரவு நடந்த கூட்டத்தில் முடிவு

மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியினர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க நேற்றிரவு நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் முடிவு செய்துள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த- மகிந்த ஆதரவு, அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த முடிவை எடுத்துள்ளனர்.

சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லையாம் – கோத்தா கூறுகிறார்

போரின் போது, சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பீரகீத் கடத்தல் வழக்கில் மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரியும் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவரை நேற்று கைது செய்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் ஊடுருவல் 3 மாதங்களுக்குள் நிறுத்தப்படும் – கூட்டமைப்புக்கு சுஸ்மா வாக்குறுதி

இந்திய மீனவர்கள் வட பகுதி கடற்பகுதியில் அத்துமீறி நுழைவது மூன்ற மாதங்களுக்குள் நிறுத்தப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த 11 பேர் கொண்ட ஆலோசனை செயலணி- ஐ.நா நிபுணர் வருகிறார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக 11 பேர் கொண்ட ஆலோசனைச் செயலணி ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ளது.

அடுத்து பசில், நாமல் கைதாவர்? – தொடரப்போகிறது ராஜபக்ச குடும்பத்தின் சிறைவாசம்

அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் அடுத்ததாக கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று யாழ். செல்கிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் – நேற்று ஐ.நா அதிகாரிகளுடன் ஆலோசனை

நான்கு நாள் பயணமாக நேற்று சிறிலங்கா வந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இன்று யாழ்ப்பாணம் சென்று நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார்.

நல்லிணக்க விவகாரங்கள் குறித்து சந்திரிகா- சுஸ்மா இடையே பேச்சு

இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சற்று முன்னர், (இன்று முற்பகல்) சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

வடக்கில் 27 பாடசாலைகளை புனரமைக்கிறது இந்தியா- சுஸ்மா, மங்கள கைச்சாத்திட்ட உடன்பாடு என்ன?

வடக்கில் 27 பாடசாலைகளைப் புனரமைப்பதற்கும், மட்டக்களப்பு போதனா மருத்துவமனை சத்திரசிகிச்சைக் கூடத்துக்கான கருவிகளை வழங்கவும், இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இன்று மைத்திரி, சம்பந்தனை சந்திக்கிறார் சுஸ்மா

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.