மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

கூட்டமைப்பின் சமஸ்டித் தீர்வு நிலைப்பாட்டுக்கு ஜெர்மனி ஆதரவு

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஸ்டி தீர்வை முன்வைத்திருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு ஜேர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புத் துறையிலும் நெருங்கிய உறவைப் பேண சீனா- சிறிலங்கா இணக்கம்

பாதுகாப்புத் துறையில் நெருக்கமான உறவுகளை பேணிக் கொள்வதற்கு சீனாவும், சிறிலங்காவும் விருப்பம் தெரிவித்துள்ளன.

இனி எந்த அரசியல்வாதிக்கும் இராணுவப் பாதுகாப்பு கிடையாது – ருவான் விஜேவர்த்தன

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை அவமானப்படுத்துவதற்காகவோ அல்லது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்காகவோ, அவருக்கான இராணுவப் பாதுகாப்பு விலக்கப்படவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிரகீத் கடத்தல் வழக்கு- கையொப்பத்தை மாற்றி இராணுவ புலனாய்வு அதிகாரிகள் தப்பிக்க முயற்சி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் தமது கையொப்பங்களை மாற்றியிருப்பதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மகிந்த, கோத்தாவின் இராணுவ பாதுகாப்பு முற்றாக நீக்கப்படும்- சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

முக்கிய பிரமுகர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு அளிக்கப்படுவது சட்டவிரோதம் என்றும், மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான இராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி.

மீண்டும் வெற்றிலையில் சங்கமிக்கிறது ஈபிடிபி?

இனிவரும் தேர்தல்களில் கூட்டாகப் போட்டியிடுவது குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஈபிடிபி கட்சியும் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றன.

பசில் வீட்டில் சமைப்பதற்காக இராஜதந்திர கடவுச்சீட்டில் அமெரிக்கா அனுப்பப்பட்ட கடற்படையினர்

பசில் ராஜபக்சவின் மகனின் வீட்டில் சமையல் வேலைகளை செய்வதற்காக சிறிலங்கா கடற்படையினர் இருவர், இராஜதந்திரக் கடவுச்சீட்டில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

65 ஆயிரம் வீட்டுத் திட்டம்- இன்னமும் இறுதி முடிவு இல்லை என்கிறார் அமைச்சர் சுவாமிநாதன்

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை எந்த நிறுவனத்திடம் கையளிப்பது என்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் பாதுகாப்புக் குறைக்கப்பட்டதா? – மக்களைக் குழப்பும் அரசாங்கமும் எதிர்க்கட்சியும்

தமக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அளுத்கம விகாரையில் நேற்று வழிபாடுகளை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா பிரதமர்

மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.